செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

சட்டமன்றத் தேர்தலையொட்டி இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேளாண் துறை இணை செயலாளராக பணியாற்றிவரும் ஆனந்த், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக பணியாற்றிவரும் அஜய் யாதவ் ஆகியோர், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், அஜய் யாதவ் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:

Related posts

250 மாணவ, மாணவியர்கள் இரண்டு கையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

Jayapriya

“அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” – கமல்ஹாசன்

Karthick

உதயநிதிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?- அமைச்சர் செல்லூர் ராஜூ!

Jayapriya