தமிழகம்

“எழுவர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது” – ஓ.பி.எஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை. தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, வரும் செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஏழு பேர் விடுதலை குறித்து ஆவணங்களை ஆய்வு செய்த ஆளுநர், குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பான பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அறிஞர் அண்ணா நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Jayapriya

நாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!

Jeba

”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”- மு.க.ஸ்டாலின்!

Jayapriya

Leave a Comment