தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள்: ஓபிஎஸ், இபிஎஸ்


வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டுமென ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசியல் களம் கடந்த ஒருமாதமாக கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பரப்புரை, வாக்குப் பதிவு என தேர்தல் தொடர்பான பணிகளில் மூழ்கியிருந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப் பதிவு மாலை 7 மணி வரை நீடித்தது. 72.78 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மே 2ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதுவரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தமிழகத்தில் வாக்குப் பதிவு சுமூகமாக நடைபெற உதவிய அதிமுகவினர், வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கும் வரையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருந்திட வேண்டாம் எனவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு!

Saravana

தேர்தல் பரப்புரையில் திமுகவை கடுமையாக விமர்சித்த தினகரன்

Niruban Chakkaaravarthi

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Nandhakumar