அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வஃப்பு வாரிய தலைவருமான முகமது ஜான் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார்.
ராணிப் பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளரான எஸ். எம். குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் முகமது ஜான் ஈடுபட்டிருந்தர். இந்நிலையில் இன்று காலை முதல் வாலாஜ அருகே அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு மதிய உணவிற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Advertisement: