தமிழகம் முக்கியச் செய்திகள்

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருப்பதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியருக்கு 52 லட்சம் மடிக் கணிணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களில் உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக அரசு கண்ணை இமை காப்பதுபோல மக்களை பாதுகாத்து வருவதாக முதல்வர் கூறினார். எனினும், அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக சாடிய முதல்வர், ஸ்டாலினுடன் எந்த இடத்தில் வேண்டுமாலும் விவாதிக்க தயார் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது எனத் தெரிவித்தார். கிருபானந்த வாரியர் பிறந்த தினமான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்

Advertisement:

Related posts

நிலத்தகராறு: இளைஞரின் காதை கடித்து துப்பிய அதிமுக பிரமுகர்!

Jayapriya

மாஸ்டர் 50வது நாள்: லோகேஷ் கனகராஜ் ட்வீட்

Niruban Chakkaaravarthi

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

Leave a Comment