தமிழகம்

திமுக தலைவர் ஸ்டாலின் மீது அதிமுகவினர் புகார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பாஸ்கரன் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பேசியதாகக் கூறி சிவகங்கையில் அதிமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் கடந்த 8ம் தேதி திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி, கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், மற்றும் அதிமுக குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாநில எம்.ஜி.ஆர் அணி துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்டோர் தனி தனியாக சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி பொறுப்பில் உள்ள பிரபாகரனிடம் புகார் மனு அளித்தனர்.

Advertisement:

Related posts

அதிமுக அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள் வெற்று அறிக்கையே: வேல்முருகன்

Niruban Chakkaaravarthi

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya

பாலியல் வன்கொடுமை வழக்கில் திருமணமான இளைஞர் கைது!

Niruban Chakkaaravarthi

Leave a Comment