கன்னியாகுமரியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட நிகழ்வில் அதிமுக- திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திமுக எம்.எல்.ஏ மற்றும் அதிமுக செயலாளர்கள் திட்டத்தை துவக்கி வைத்த நிலையில் அரசு திட்டத்தை அரசு அதிகாரிகள் வழங்காமல் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் எவ்வாறு வழங்கலாம் என்று திமுக நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல திமுக நிர்வாகிகள் வெளியேற வேண்டும் என்று அதிமுகவினரும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு-முள்ளு நிலைக்குச் சென்றது. இதனையடுத்து, தக்கலை டி.எஸ்.பி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர். இரு கட்சியினரிடையே நடந்த வாக்கு வாதம் காரணமாக நிகழ்ச்சியில் பயனாளிகள் சிறிது நேரம் பரிதவித்தனர்.
Advertisement: