தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!

திமுகவின் 10 கூட்டணி கட்சியல்ல 100 கட்சிகள் வந்தாலும், அதிமுகவை அசைக்க கூட முடியாது, தொட்டு பார்க்க கூட முடியாது என நடிகை விந்தியா கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் பி.அய்யப்பனை ஆதரித்து நடிகை விந்தியா மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் மத்தியில் பேசிய நடிகை விந்தியா, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் திமுக கமிசன் தொகையின்றி காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

காசு, பணம், துட்டு, மணி என காய்ந்து கிடப்பவர்களை ஆட்சியில் வைத்தால் என்ன ஆகும் என உங்களுக்கே தெரியும், கூகுளில் தேடினாலும் வரிசையாக வந்து நிற்கும் திமுகவின் அராஜகங்கள். திமுகவில் கூட்டணி அமைத்துள்ளவர்கள் எதற்கும் ஆகாதவர்கள். 10 கட்சி கூட்டணி இருந்தாலும் சரி 100 கட்சி கூட்டணியில் வந்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது தொட்டு பார்க்க கூட முடியாது என நடிகை விந்தியா பேசினார்.

Advertisement:

Related posts

புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா!

Niruban Chakkaaravarthi

மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Jeba

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்கா!

Niruban Chakkaaravarthi