நடிகை காயத்ரி சாய்நாத்தின் செல்போன் எண்ணை ஆபாசமாக சித்தரித்து நண்பர்களின் வாட்ஸ்ஆப் குரூப்பில் பதிவு செய்த விவகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் நடித்தவர் காயத்ரி சாய்நாத். சென்னை தேனாம்பேட்டை சீதம்மாள் காலனியில் வசித்து வரும் அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். பீட்சாவை டெலிவரி செய்ய வந்த பரமேஸ்வரன் வழி தெரியாமல் தாமதமாக டெலிவரி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் காயத்திரி சாய்நாத் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பரமேஸ்வரன் அடிக்கடி காயத்ரிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளார். அத்துடன் அவரது மொபைல் எண்ணை ஆபாச வீடியோக்களை ஷேர் செய்யும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.
இதனால், காயத்ரிக்கு பலரும் போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதையடுத்து இது குறித்து தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் காயத்திரி புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது காயத்ரியின் செல்போன் எண்ணை ஆபாச வீடியோக்களை ஷேர் செய்யும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பரமேஸ்வரன் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும் இப்போது பரமேஸ்வரனின் சகோதரர் வைரமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கண்டுள்ளனர்.
Advertisement: