சினிமா தமிழகம் முக்கியச் செய்திகள்

ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்!

தேர்தல் முடிந்த கையோடு தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜயின் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜயின் 65வது படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார் எனவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதைப்போலவே படப்பிடிப்பும் இந்த மாதம் தொடங்கியுள்ளது.

பல நாட்களாகவே நடிகர் விஜயின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்டது போலவே தற்பொழுது தொடங்கியுள்ளது. படத்திற்கான வேலைகளைப் படக்குழுவினர் கடந்த சில தினங்களாகவே ஜார்ஜியாவில் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து நீலாங்கரை வாக்குச் சாவடிக்குச் சைக்கிளில் சென்று வாக்களித்தார். சைக்கிளில் நடிகர் விஜய் சென்றதைத் தெரிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்து ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. ரசிகர்கள் சூழ நடிகர் விஜய் தனது ஜனநாயக கடமையை நிறைவுசெய்தார். மேலும் அவர் தன் வீட்டிற்குத் திரும்புச் செல்லும்பொழுது விஜய் மக்கள் மன்ற நிர்வாகியின் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

மேலும் இந்த நிகழ்வு நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இதற்குப் பதிலளித்த விஜயின் தரப்பு வாக்குச் சாவடிக்குச் செல்லும் பாதை மிக குறுகியதாக இருந்ததால் வாகன நெரிசல் ஏற்படக்கூடாது என கருதி சைக்கிளில் சென்று வாக்களித்ததாகப் பதில் கூறியது.

இந்நிலையில் தேர்தலில் வாக்களித்த கையோடு நடிகர் விஜய் நேற்று இரவு தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேர் நடிக்கிறார். மேலும் மாஸ்டர் படத்திற்கு இசை அமைத்த இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை வரும் 6ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!

Gayathri Venkatesan

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

Gayathri Venkatesan

அக்னி தீர்த்தக்கடலில் இறங்கி மார்க்சிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம்!

Saravana