செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஜாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அவரது மனைவுடன் சென்று வாக்களித்தார்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், சித்தார்த், மாதவன், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, அர்ஜூன், நாசர், கமல், சூர்யா, கார்தி, சிவகுமார், நமீதா, குஷ்பூ, சினேகா, கீர்த்தி சுரேஷ், நிக்கிகல்ராணி, திரிஷா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் சசிகுமார் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி அவரது மனைவி ஜெஸ்ஸி சேதுபதியுடன் வாக்களித்தார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்களை சில கேள்விகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ’2019 ஆம் ஆண்டில் நான் ஜாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறினேன் இப்போதும் அதே நிலைபாட்டில்தான் இருக்கிறேன். எனக்கு மனிதர்கள்தான் முக்கியம். விஜய் சைக்கிளில் வந்து வாக்களிப்பது தொடர்பாக என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அவரிடமே கேளுங்கள்’ என்றார்.

Advertisement:

Related posts

பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

Karthick

எதிர்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Niruban Chakkaaravarthi

மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

Gayathri Venkatesan