சினிமா முக்கியச் செய்திகள்

நடிகர் செல்லதுரை காலமானார்!

மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

கத்தி, தெறி, மாரி, அறம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர் செல்லதுரை. இவரது உணர்ச்சிகர நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அற்புதமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். இந்நிலையில் நேற்று அவருக்கு சுய நினைவு இல்லாமல் போனது,  இதைத்தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது பிரபல வசனமான ’அப்படியா விசயம்’அதிகமானோரைக் கவர்ந்த ஒரு வசனம். இவரது மரணச் செய்தியை ஏற்றுக்கொள்ள இயலாத இவரது ரசிகர்கள் இந்த வசனத்தை வைத்து தற்போது  மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். தெறி படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அவருக்கு மேலும் ரசிகர்களை அதிகப்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் சென்னை, பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவு இழந்ததாக அவரது மகன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் உயிரிழந்ததாகக் கூறினார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் 2 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.  இந்நிலையில்  இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே.வி. ஆனந்த், உடல் பெசன்நகரில் தகனம் செய்யப்படுகிறது.

மேலும் கடந்த ஏபரல் 17ஆம் தேதி நடிகர் விவேக்கும் மாரடைப்பால் மரணமடைந்தார்.  சினிமாத்துறையில் நடைபெறும் தொடர் மரணங்கள் திரைத்துறையினரைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Advertisement:

Related posts

ஏரியில் தொலைந்த ஐபோன்: ஒரு வருடம் கழித்துக் கிடைத்த அதிசயம்

Karthick

“கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து ஊழல் செய்தவர்கள் திமுகவினர்” – முதல்வர் விமர்சனம்

Saravana Kumar

போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!

Jeba