இந்தியா சினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்

வைரலாகும் விராட், அனுஷ்கா குழந்தையின் புகைப்படம்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் நேற்று தங்களுடைய குழந்தையுடன் புனே விமான நிலையத்திற்கு வந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பிரபல நட்சத்திரங்களான விராட் கோலி-அனுஷ்கா ஷர்மாவுக்கு கடந்த ஜனவரி 11-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு சில நாட்கள் மட்டுமே குழந்தையுடன் விராட் கோலி உடனிருந்தார். பின்னர் இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டி-20 போட்டிகளில் கலந்துகொள்ள சென்றுவிட்டார்.

தற்போது இந்தியா-இங்கிலாந்து இடையேயான டி-20 போட்டி முடிந்த நிலையில் விராட் கோலி தனது மனைவியுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள மும்பை விமானநிலையம் சென்றிருந்தனர். அப்போது அவர்களை புகைப்படகாரர்கள் படம் எடுத்துள்ளனர்.

அதில் அனுஷ்கா ஷ்ர்மா தன்னுடைய குழந்தை ‘வாமிகா’ கையில் அணைத்தபடி முன்னால் செல்ல கிரிக்கெட் வீரர் விராட் குழந்தையின் தொட்டில்,சூட்கேசுடன் பின்னால் வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement:

Related posts

ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்!

L.Renuga Devi

”மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!

Jayapriya