சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, வழிமாறி நடிகர் அஜித் வந்ததால் அங்கு சிறுது பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப் அலுவலகத்திற்கு, நடிகர் அஜித்குமார் அடிக்கடி பயிற்சிக்கு வருவதுண்டு. இந்த ரைபிள் கிளப், எழும்பூரில் காவல் ஆணையர் அலுவலகம், முன்பு செயல்பட்ட இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்காக தனியார் கால்-டாக்சியில், அஜித் பயணித்துள்ளார். கூகுள்மேப் மூலம் தவறுதலாக காவல் ஆணையர் அலுவலக முகவரியை பதிவு செய்த ஓட்டுநர், தற்போதுள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனையறிந்த காவல் ஆணையர் அலுவலகத்தின், மக்கள் தொடர்பு அதிகாரி, கால் டாக்சி ஓட்டுநருக்கு சரியான வழியை கூறி, அனுப்பி வைத்தார். முன்னதாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள், அஜித்குமாருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வழிமாறி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் அஜித்குமார். சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித்குமார் அவ்வப்போது வருவதுண்டு.
அதேபோல இன்றும் ரைபிள் கிளப்பிற்கு தனியார் வாகனத்தில் வந்துள்ளார் அஜித்குமார். ரைபிள் கிளப் காவல் ஆணையர் அலுவலகம் முன்னர் செயல்பட்ட இடத்தில் உள்ளது. ஆனால் தனியார் ஓட்டுநர் தவறுதலாக அஜித்குமாரை தற்போதுள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிட்டார். இதனையடுத்து மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் ஓட்டுநருக்கு வழி சொல்லி அனுப்பி உள்ளார். முன்னதாக அஜித்குமாரை பார்த்த மகிழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Advertisement: