டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, ஒரு பிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து, சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. டிராக்டர் பேரணியில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின.
விவசாயிகளை வன்முறைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், நடிகர் தீப் சித்துவை டெல்லி போலீசார் தேடி வந்தனர். தீப் சித்து குறித்து தகவல் அளித்தால், ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து இருந்தனர். 2 வாரங்களாக தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து, டெல்லி சிறப்புப்பிரிவு போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement: