இந்தியா முக்கியச் செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட 22 வயது மாணவி கைது!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சமீபத்தில் சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தென்பர்க் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அந்த ட்விட்டினை பெங்களூரை சேர்ந்த 22 வயது திஷா ரவி என்கிற மாணவி, திருத்தி சமூவ வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும், இரண்டு பேர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கைது செய்யப்பட்ட மாணவியும், சூழலியல் ஆர்வலருமான திஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, “தான் கிரெட்டா ட்வீட்டின் சில வரிகளை மட்டுமே மாற்றியதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவளித்ததாகவும் நீதிமன்றத்தில் திஷா தெரிவித்துள்ளார். இதன் பின்னர் 5 நாள் டெல்லி காவலில் மாணவியை வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் மாணவி தானாக வாதாடியுள்ளார். இது குறித்து மாணவியின் தரப்பிலிருந்து சட்ட ஆலோசனை வழங்குவதற்கு முன்னர் மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், “மாணவி திஷா ரவியின் கைது நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. எல்லையில் சீன இராணுவ ஊடுருவலைக் காட்டிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பது எவ்வகையில் ஆபத்தானது?” என கேள்வியெழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!

Jayapriya

மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு ரத்து செய்யப்பட்ட அரசு விமான சேவை!

Niruban Chakkaaravarthi

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

Jayapriya

Leave a Comment