இந்தியா முக்கியச் செய்திகள்

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு ஜாமீன்!

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்வதேச இளம் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிரெட்டாவின் ட்வீட்டினை மாற்றியமைத்து பதிவிட்டதாகவும், இந்த பதிவு விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான கருத்தினை உருவாக்கியதாக பெங்களூரை சேர்ந்த 22 வயதான இளம் சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவியை டெல்லி காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திஷாவின் தரப்பிலிருந்து ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். இது குறித்து இன்று நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், ரூ.1 லட்சம் பிணை தொகையாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..

Jayapriya

“ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்” – ராஜ்நாத் சிங்

Niruban Chakkaaravarthi

உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Jayapriya