தேர்தல் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க இளைஞர்களை நிறுத்தி, உதயசூரியனை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
சுவர் விளம்பரங்கள் வெகுவாக குறைந்துவிட்டதால், தேர்தல் சின்னத்தைப் பரப்ப, உதயசூரியன் அச்சிட்ட தொப்பி, ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள் போன்றவற்றை திமுக வழங்கி வருகிறது. இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக உதயசூரியன் சின்னத்தை, இளைஞர்களை ஒன்றுதிரட்டி உருவாக்கி காட்டியிருக்கிறது.

சென்னை கொட்டிவாக்கத்தில் ஒன்று திரண்ட திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள், சாதனை முயற்சி செய்து அசத்தினர். மலை வடிவில் 2,000 பேர், சூரியன் வடிவில் 1,500 பேர், 5 பெரிய கதிர்கள் வடிவில் 1,500 பேர், 4 சிறிய கதிர்கள் வடிவில் 1,000பேர் என 6,000 இளைஞர்கள் பங்கேற்ற Human Image of Rising Sun என்ற தலைப்பிலான சாதனை நிகழ்வை Asian Book of records நிறுவனத்தினர் அங்கீகரித்து அந்த சாதனைக்குரிய சான்றிதழையும், பதக்கத்தையும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளர் மா சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, உதயசூரியனை மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்க எடுத்துக்கொண்ட முயற்சியாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Advertisement: