செய்திகள்

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய அமீர்கான்!

சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக வெளியான அமீர்கானின் அறிவிப்பு, அவரின் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் கடந்த மார்ச்14 அன்று அவரது 56வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ட்விட்டர், இன்ஸ்டகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்தன.

தனக்கு வந்த அனைத்து பிறந்தநாள் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்து நேற்று மார்ச்15 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து சமூகவலைத்தள பக்கங்களிலிருந்தும் தான் விலகிக்கொல்வதாகத் தெரிவித்தார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது:

“என் பிறந்த நாள் அன்று வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, என் மனம் நிறைந்துவிட்டது, மேலும் இது தான் என்னுடைய கடைசி வலைத்தள பதிவு என்பது இன்னொரு செய்தி! நான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவதாக கருதினேன் அதனால், விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இதற்கு முன் இருந்தது போலவே என்றும் தொடர்பில் இருப்போம்”.

என்றும், ”அமீர்கான் அமீர்கான்” ப்ரொடெக்ஸன்ஸ் எனும் அதிகாரப்பூர்வ சேனலை தொடங்கியிருப்பதாகவும், தன்னுடைய எதிர்கால அப்டெட்கள், தான் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களையும் அந்த சேனலில் தெரிந்துகொள்ளலாம், என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய அவரின் அறிவிப்பு பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள்!

Gayathri Venkatesan

டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்: ஜி.கே.வாசன்

Niruban Chakkaaravarthi

இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் காலமானார்!

Saravana Kumar