நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பதவிக்காலம் இக்கூட்டத் தொடருடன் முடிவடையக்கூடிய நிலையில், அவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி கண்கலங்கினார். இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியுள்ளார். ஆசாத்துடன் பல ஆண்டுகள் நண்பராக இருந்து வருவதாகவும், 2006-ல் அவர் ஜம்மு&காஷ்மீர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலாப்பயணிகள் காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் சிக்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் நான் குஜராத்தின் முதல்வராக இருந்ததாகவும், அந்த பதட்டமான சூழலில் ஆசாத் பெரும் உதவி புரிந்ததாகவும் அதனை தன்னால் எப்போதும் மறக்கவே முடியாது என்றும் கூறி கண்கலங்கினார்.
மேலும், நான் உங்களை ஓய்வு பெற விடமாட்டேன், தொடர்ந்து உங்களது ஆலோசனைகளை பெற்று வருவேன், என்னுடைய கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என பிரதமர் நா தழுதழுக்க பேசினார்.
Advertisement: