குற்றம் முக்கியச் செய்திகள்

விடுதியின் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை!

ஹைதராபாத்தில் இளம் பெண் ஒருவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா, நல்கொண்டா மாவட்டம் மிர்யலகுடா பகுதியை சேர்ந்தவர் 22 வயதான சந்திரிகா. இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் நிலையில், விடுதியின் நான்காம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை கண்ட விடுதி காவளாலி, காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லூரி நடத்தப்பட்ட தேர்வுகளில் சந்திரிகா குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

தொண்டர்களை பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

Jayapriya

“நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்

Saravana Kumar