வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளின் குழந்தைகளுக்காக சிறப்பு பள்ளி ஒன்றை தன்னார்வளர்கள் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 80 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உத்திர பிரேதசத்தின் காசிப்பூர் எல்லை பகுதியில் வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளின் குழந்தைகளுக்காகவும், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கும் சமூக ஆர்வலர்களால் சிறப்பு பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. ஏழைக்கு குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பலர் இங்கு பணியாற்ற இணைந்துள்ளனர்.
இங்கு படித்துவரும் குழந்தைகளில் பலர் போராட்டம் நடந்து வரும் பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து வந்தனர். தற்போது இவர்கள் அனைவரும் இந்த பள்ளிகளின் மூலம் அறிவை வளர்த்து வருகின்றனர். இந்தப்பள்ளியானது காலை 11 மணி அளவில் திறக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நல்ல புரிதல் இருப்பதால் மாணவர்கள் காலை 9 மணியிலிருந்து பள்ளிக்கு வந்து படிக்க தொடங்கிவிடுகின்றனர்.
Advertisement: