சினிமா முக்கியச் செய்திகள்

ராம்கோ குழுமத்தில் ஒரு புதிய நட்சத்திரம்; நடிகையாக அறிமுகமாகும் சந்தியா ராஜூ!

பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா “நாட்டியம்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக சந்தியா ராஜூ அறிமுகமாகிறார். நாட்டியத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷ்ரவண் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தரான தில்ராஜூ, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்தார்.

தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் முறையாக நடனம் கற்று சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

நாகையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

Saravana

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

வியக்க வைக்கும் சைக்கிள் மிக்ஸி; இன்ஜினியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Jayapriya

Leave a Comment