செய்திகள் முக்கியச் செய்திகள்

A++தரச் சான்றிதழை பெற்றது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு A++தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப வசதிகள், கற்றல், கற்பித்தல் தொடர்பாக நாக்(தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு) ஆய்வு செய்து தர மதிப்பீடு வழங்கி வருவது வழக்கம்.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு கடந்த மார்ச் 5,6,7 ஆகிய 3 நாள ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

இக்குழுவினர் உயர்கல்வி நிலையங்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்து கல்லூரிகளில் உள்ள வசதிகளுக்கேற்ப தர நிர்ணயம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகள், ஆய்வுக்கூடங்களில் உள்ள நவீன பரிசோதனைக் கருவிகள், அடிப்படை வசதிகள், மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகளில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள்,கற்பித்தல் முறைகள் தொடர்பாக நாக் ஆய்வுகுழுவினர் ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.

இதுவரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பு “ஏ +” அங்கீகாரத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இதற்கான தரச்சான்றிதழ் உயர்த்தப்பட்டு ஏ++தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டி

Jeba

மத்திய நிதிநிலை அறிக்கை: முதல்வர் பழனிசாமி வரவேற்பு

Saravana

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

Jayapriya