தமிழகத்தில் வனவிலங்கு குற்றவியல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் வனத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கபட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மற்றும் சதீஷ் அமர்வு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வனவிலங்கு குற்றவியல் சம்பந்தமாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு வனத்துறை செயலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Advertisement: