இந்தியா முக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 513 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,85,509 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,16,29,289 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 6,91,597 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 7,59,79,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை 1,64,623 பேர் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Saravana

20 வயதில் இந்தியாவின் முதல் லைன்வுமென்; சாதனை படைத்த தெலங்கானா பெண்!

Saravana

நேதாஜி உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க கோரிய மனு!

Niruban Chakkaaravarthi