இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மொத்த வாக்காளர்கள் 90, பதிவான வாக்குகள் 181: அசாம் மாநில தேர்தல் குளறுபடிகள்!

அசாம் மாநிலத்தில் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 6 தேர்தல் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், கேரளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. அசாம் மாநிலத்தை பொறுத் அளவில் ஏற்கெனவே முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதில் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹாஃப்லாங் வாக்குச்சாவடியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இத்தொகுதியில் மொத்தமும் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 181 வாக்குகள் பதிவாகியிருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அப்பகுதியின் தலைவர் புதிய வாக்காளர்களின் பட்டியலின்படி கூடுதலாக வாக்களிக்க முயன்றதாகவும், அதற்கு தேர்தல் அதிகாரிகள் ஒத்துழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இச்சம்பவத்தில் உறுதுணையாக இருந்த ஆறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், முறைகேடு நடந்த தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட உள்ள தினகரன்

Saravana Kumar

“திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்”: மமதா பானர்ஜி

Karthick

மற்ற சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கப் போராடுவேன்: ராமதாஸ்

Karthick