தமிழகம் முக்கியச் செய்திகள்

ஸ்கேன் எடுக்கச் சென்ற 8 மாத கர்ப்பிணி உயிரிழந்த பரிதாபம்!

சென்னை திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க சென்ற 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மனைவி வைஷாலி. 8 மாத கர்ப்பிணியான இவர், திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயக்கமடைந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், மருத்துவமனையின் முறையற்ற சிகிச்சையால்தான் தனது மனைவி உயிரிழந்ததாக கூறி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்டிஓ ப்ரீத்தி பார்கவி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இளம் கர்ப்பிணி பெண்னுடன் சேர்ந்து கருவில் வளர்ந்த சிசுவும் உயிரிழந்தது பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:

Related posts

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவால் பாதிப்பு!

Karthick

சென்னை அருகே அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த காப்பகம்… 9 சிறுவர்,சிறுமிகள் மீட்பு!

Saravana

மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகள்!

L.Renuga Devi

Leave a Comment