செய்திகள் முக்கியச் செய்திகள்

6, 7 மற்றும் 8-ம் வகுப்புக்கும் 50% அளவுக்கு பாடத்திட்டம் குறைப்பு!

9 முதல் 12-ம் வகுப்பை தொடர்ந்து 6, 7 மற்றும் 8-ம் வகுப்புக்கும் 50 சதவீதம் அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறப்பு தாமதமானதால், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது.

தற்போது, 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 50 சதவீதம் அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை விரைவில் திறந்து, நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement:

Related posts

தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது மத்திய இரயில்வே துறை!

Niruban Chakkaaravarthi

உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Niruban Chakkaaravarthi

தமிழகம் வெற்றி நடை போட்டால் தாங்கள் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து!

Saravana

Leave a Comment