ஆசிரியர் தேர்வு தமிழகம்

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு நெல்லை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை காவல் ஆணையர் தீபக் தாமோர் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜி ஷங்கர் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி சென்னை சிபிசிஐடி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை எஸ்பி மணிவண்ணன் தூத்துக்குடி எஸ்பியாகவும், தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை பூந்தமல்லி 8-வது பட்டாலியன் கமாண்டண்டாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட பணியிட மாற்றத்தின்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

சசிகலா காரில் அதிமுக கொடி: அதிமுக நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்!

Jeba

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு நாளை அடிக்கல்!

Jeba

நிவர் புயலால் பெரிய பாதிப்பில்லை: முதல்வர் பழனிசாமி

Sathis