செய்திகள்

50 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பேன்: கமல்ஹாசன்

50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியுமென மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் திருநகர் காலணியில் தேர்தல் பரப்புரை ஈடுபட்ட கமல்ஹாசன், மண்ணை நேசிக்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் அதை வண்டியில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தான் நேர்மையான முறையில் சம்பாதிப்பதாகவும், அதற்கு வரி கட்டுவதாகவும் கூறிய அவர், டாஸ்மாக் கடையை மூடுங்கள், நான் வருகிறேன் எனக் குறிப்பிட்டார். கமிஷன் கேட்காமல் இருந்தால் அனைத்து தொழில் அதிபர்களும் திரும்பி வருவார்கள் என்ற அவர், “என்னால் 50 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க முடியும், 5 லட்சம் தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்க முடியும், வறுமைக் கோடு என்பதை செழுமைக் கோடு என மாற்ற முடியும்” எனக் குறிப்பிட்டார்.

உங்களுக்கு சரித்திரத்தை மாற்றும் அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் நாங்கள் சட்டத்திற்குட்பட்டு எங்கள் சாதனையை செய்யப்போகிறோம் எனவும் கமல்ஹாசன் கூறினார்.

Advertisement:

Related posts

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும்: சைதை துரைசாமி!

Karthick

அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள்: சீமான்

Saravana Kumar

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயஸ்ரீயின் நேர்காணல்!

Gayathri Venkatesan