குற்றம் செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!

திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (35). இவர் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக ஆலங்காடு கிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தவர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றபோது ஆலங்காடு டாஸ்மாக் கடை அருகே மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல், ராஜேஷை விரட்டி சரமாரியாக வெட்டி அவரது தலையை துண்டித்தது. அதையடுத்து அவரது உடலை அப்பகுதியிலேயே போட்டுவிட்டு முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் தலையை வீசிவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டு கொலையாளிகள் தப்பி செல்லும் சிசிடிவி காட்சியை கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோவிலூரைச் சேர்ந்த ஜெகன், அஜித், அருண்குமார், செந்தில் ராஜா, யோகேஸ்வரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து கொல்லப்பட்ட ராஜேஷின் துப்பாக்கி மற்றும் கொலையாளிகளிடமிருந்து அறிவாள்கள், கார், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர்.

Advertisement:

Related posts

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Dhamotharan

ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

Jeba

மக்கள் சேவைக்கட்சிக்கு வழங்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

Saravana Kumar