இந்தியா

18 மாதங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இணைய சேவை

ஜம்மு-காஷ்மீருக்கு விதிக்கப்பட்டிருந்த இணையத் தடை நீக்கப்பட்டு 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பதட்டத்தை தவிற்பதற்காக முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அத்துடன் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இணைய சேவை வழங்கப்படாத நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது ஜம்மு-காஷ்மீர் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதால், 18 மாதங்களுக்கு பிறகு 4 ஜி மொபைல் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

கணவன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

Saravana

ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை!

Saravana

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியானது!

Jayapriya

Leave a Comment