தமிழகம் முக்கியச் செய்திகள்

வாக்களிப்பதில் ஆர்வமற்ற இளம் தலைமுறையினர்

48% முதல்தலைமுறை வாக்களர்கள் தங்கள்து பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. சென்னையில், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 1,24,824 வாக்காளர்களில் 64,152 பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய விரும்பவில்லை என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதல் முறை வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களுக்கு வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்துகொண்டிருக்கிறோம். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள 64,152 தவிர மீதமுள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தனிதனியாக நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்துள்ளோம். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நாகஸ்வரா ராவ் பூங்காவில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. அதேபோல், மாலை 6 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமையும்.

மேலும், வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த 34 நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தற்போது 10 நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. மாணவர் குடியிருப்பு, கடற்கரை பகுதி, உடற்பயிற்சி கூடம், பொது போக்குவரத்து போன்ற இடங்களில் இ-பைக் பேரணிகள் இந்த வாரத்தில் நடக்க உள்ளது. அதேபோன்று பெண் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப் பட்ட ரூ.1.75 கோடி பறிமுதல்!

Karthick

சசிகலாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்!

Niruban Chakkaaravarthi

திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி

Jeba