இந்தியா

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கொரோனா; உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடந்து உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்தது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணத்தடைகளை விதித்துள்ளன. இதில் மத்திய அரசும் வரும் 7ஆம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியாவில் நுழைய தடை விதித்தித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் இதுவரை பிரிட்டனில் இருந்து வந்த 25 பேருக்கு ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 பேருக்கு இன்று புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பாதிப்புகள் பெங்களூருவிலும் ஒன்று ஹைதராபாத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

“அரசாங்கத்தின் அதிகாரங்கள் மக்களை காக்கவே பயன்பட வேண்டும்”: வெற்றிமாறன்

Jeba

சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?

Dhamotharan

நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான அறிவிப்புகள்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment