இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் இன்றைய வாக்குப்பதிவின் போது பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே நடந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தற்போது 17வது சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. கடந்த மாதம் முதலே பல கட்டமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 44 தொகுதிகளுக்காக நடந்து வரும் இந்த வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் திரிணாமுல் கட்சியினர் மத்தியில் மோதல் ஏற்பட்டது.

இரு கட்சியினரிடையே நடந்த மோதலைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர, மேலும் 4பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் கூச் பிகார் எனும் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் தற்பொழுது பதட்டமான சூழல் நிலவுகிறது.

Advertisement:

Related posts

தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

Gayathri Venkatesan

நடிகர் கமல்ஹாசனை காண கூட்டம் கூடும், ஆனால் அது வாக்காக மாறாது; அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

Saravana

ராமர் பாடல்களை பாடி நடனமாடிய ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்!

Karthick