செய்திகள் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து மூன்றாயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 842 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 66 ஆயிரத்து 913 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:

Related posts

பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : மகேந்திரன்

Karthick

நான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா!

Saravana Kumar

இந்தியாவில் 5G சேவை விரைவில் அறிமுகம்!

Jeba