இந்தியா குற்றம் முக்கியச் செய்திகள்

போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் மதுபானம் கிடைக்காததால் 5 லிட்டர் கேன் சானிடைஸரை குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த பர்வத் அஹிர்வர், பூரா அஹிர்வர், மற்றும் ராம் பிரசாத் ஆகிய 3 சகோதரர்களும் குடிக்கு அடிமையானவர்கள். ராம் பிரசாத் வீடுகளுக்கு பெயிண்ட் அடித்து வாழ்க்கை நடத்தி வருகிறார். பர்வத், பூரா கூலி வேலை செய்து வருகின்றனர். மூவருக்கும் திருமணமான நிலையில் குடும்பத்தைவிட்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். கொரோனா கட்டுபாடு காரணமாக அப்பகுதியில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மது குடிக்க ஏங்கி கொண்டிருந்த மூவரும் மது வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் ஆல்கஹால் உள்ல சானிடைஸரை குடித்தால் போதை ஏற்படும் என நினைத்து 5 லிட்டர் கேன் சானிடைஸரை வாங்கி குடித்துள்ளனர்.

சானிடைஸரை குடித்த சில நொடிகளிலே அவர்களுக்கு உடல்பில் ஏதோ செய்வது போல் தோன்றியுள்ளது. அதை பொருட்படுத்தாமல் மீண்டும் சானிடைஸரை குடித்துள்ளனர். இதனால் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை கண்ட மக்கள் விரைந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டத்தாக தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை போலவே, 2 நாட்களுக்கு முன்னர், ஆந்தர பிரதேசத்திலும் 2 பேர் மதுபானத்திற்கு பதிலாக சானிடைஸரை அருந்தி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்ற சிபிஎஸ்இ!

Niruban Chakkaaravarthi

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

Jayapriya

”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Jayapriya