தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்த இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 849 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களில், 33 ஆயிரத்து 189 பேரும், காவலர்களில் 2 ஆயிரத்து 770 பேரும் விண்ணப்பத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 49 ஆயிரத்து 114 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement: