தமிழகம் முக்கியச் செய்திகள்

ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழகத்தல் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவோர் நேற்று டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைத்துக் கொள்ள மது அருந்துவோர் கூட்டம் அலைமோதியதால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.

சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 63 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக மதுரை மண்டலத்தில் 59 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி, சேலம், கோவை மண்டலங்களில் தலா 56 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.

Advertisement:

Related posts

பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

Jeba

“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

Karthick

பழைய பொருள் கிடங்கில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!

Niruban Chakkaaravarthi