இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

தீவிரமடைகிறதா கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று தடுப்பூசிக்கான பற்றாக்குறை மேலெழுந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.30 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று தடுப்பூசிக்கான பற்றாக்குறை நிலவிவருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா 31,73,261 எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59,907 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் 26 கொரோனா தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது, சதாரா, சாங்லி, பன்வெல் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோப் தெரிவித்துள்ளார். புனேவை பொறுத்த அளவில் 100 தடுப்பூசி மையங்கள் தடுப்பூசி பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா தெரிவித்துள்ளார்.

“மாநிலம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 40 லட்சம் என மாதத்திற்கு சுமார் 1.6 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. குஜராத்தின் மக்கள் தொகையை காட்டிலும் மகாராஷ்டிராவின் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம். இந்நிலையில் அம்மாநிலத்திற்கும் ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு எங்களின் பற்றாக்குறையை போக்கும்” என ராஜேஷ் தோப் கேள்வியெழுப்பியுள்ளார்.

“தற்போதைய சூழலில் வாரத்திற்கு 17 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 17 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையென்பது வாரத்திற்கு 40 லட்சம் தடுப்பூசிகளாகும்.” என ராஜேஷ் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படாத நிலையில் பல உலக நாடுகளுக்கு 6 கோடி வரை தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!

Karthick

வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க உச்சநீதிமன்றம் முடிவு!

Saravana Kumar

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

Niruban Chakkaaravarthi