தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 250 மாணவ, மாணவியர்கள் இரண்டு கையில் சிலம்பம் சுற்றி நோபல் புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனையானது கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் சேவையை போற்றும் விதமாக நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நமது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முதன்மையான சிலம்பக் கலையை மாணவ- மாணவியர் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியின் போது பெரியகுளம் “வேலன் வாழும் கலைக்கூட அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் 250 பேர் சமூக இடைவெளி, மற்றும் முகக்கவசம், அணிந்து இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி சாதனையை நிகழ்த்தினர். இதன்மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பயிற்சியாளர் திருநாவுக்கரசு மற்றும் சுந்தரவடிவேலு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Advertisement: