குற்றம் முக்கியச் செய்திகள்

25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததுள்ளது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்டது 25 வயதான வடமாநில தொழிலாளி என்பது தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞர் குறித்த எந்த தகவலும் கிட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை – டி.ஆர். பாலு

Jeba

குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்க 16 கட்சிகள் முடிவு!

Niruban Chakkaaravarthi

டிராக்டர் பேரணி; விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!

Jayapriya