இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத். இவர் சமீபத்தில் பெண்கள் ‘ ரிப்டு ஜீன்ஸ்’ அணியக்கூடாது என்றும் ரேஷன் பொருட்கள் அதிகளவில் பெற 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பகிர்ந்த ட்வீட்டில் ‘எனக்கு கோவிட் – 19 தொற்று உறுதியாகி உள்ளது. உடல் நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மருத்துவர்களின் பரிந்துரைப்படி என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பிலிருந்த அனைரும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் அனைவருக்காகவும் வேண்டுகிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இன்று வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் கணக்கிட்டு பார்த்தால் இன்று பதிவான கொரோனா பாதித்தவர்களின் சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

உத்தர பிரதேசம் உன்னாவில் 2 பட்டியலின சிறுமிகள் மர்ம மரணம்!

Ezhilarasan

வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!

Jeba

தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!

Jeba