தமிழகம் முக்கியச் செய்திகள்

2021-20222 இடைக்கால நிதிநிலை அறிக்கையின் முக்கியம்சங்கள்! (பகுதி -1)

கோவிட்-19 பெருந்தோற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அம்மா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு, நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு.

காவல்துறைக்கு ரூ.9,567.93 கோடிய் ஒதுக்கீடு.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நீதித் துறைக்கு 1,437.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

நீதித்துறை நிர்வாகத்துறையில் புதிய நீதிமன்ற கட்டடங்களை கட்டுவதற்காக ரூ.289.78 கோடி ஒதுக்கீடு.

வேளாண் துறைக்கு 11982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மீன்வளத்துறை 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்கள் ரூ.580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது!.

நெடுஞ்சாலை துறைக்காக ரூ.6,023.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 19,420.54 கோடி ஒதுக்கீடு.

புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு, மினி கிளினிக்குகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறைக்காக மொத்தம் ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு.

சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு.

கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,224.26 கோடி ஒதுக்கீடு.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3,700 கோடி ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2,350 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு.2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சித்துறைக்காக ரூ. 22,618.58 கோடி ஒதுக்கீடு.

நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ. 6,453 கோடி ஒதுக்கீடு

மதிய சத்துணவு திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 43,246 பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ. 1953.98 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு.

கொரோனா தொற்று காரணமாக, சுகாதாரம் மற்றும் நிவாரணம் தொடர்பான பணிகளுக்கு ரூ.12,917.85 கோடி வருவாய் கணக்கில் கூடுதல் செலவினம்.

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிக்காக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

மாற்று திறனாளிகள் துறைக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில், 2 ஆயிரம் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டமாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், ரூ.1580 கோடி ரூபாய் செலவில் 2200 BS – VI பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்

தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களில் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

Advertisement:

Related posts

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை நாளை முதல்வர் வெளியீடு

Niruban Chakkaaravarthi

தை அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது; அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Saravana

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் ஜாக் மா!

Jayapriya