இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

வேலை நிறுத்தத்தை தொடங்கிய வங்கி ஊழியர்கள்!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தக்கோரியும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், திட்டச் செலவுகளுக்கான நிதி வெளியிலிருந்து பெறப்படும் என்று தெரிவித்திருந்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் வரும் நிதியை பயன்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 88,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தை பொறுத் அளவில் 14,000க்கும் மேற்பட்ட கிளைகள் மூடப்பட்டுள்ளது. 60,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மீண்டும் களமிறங்கும் டிக்டாக் செயலி!

Niruban Chakkaaravarthi

கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

Gayathri Venkatesan

இந்திய ஏவுகணைகளின் புதிய அப்டேட்; மிரளும் அண்டை நாடுகள்!

Niruban Chakkaaravarthi