தமிழகம்

ஓமலூரில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது!

ஓமலூர் அருகே வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்ற இருவர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் சேர்வராயன் வனச்சரக பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு எருமை, மான், முயல், முள்ளம்பன்றி உள்ளிட்டவைகளை அதிகளவில் உள்ளன. இந்த வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் காட்டுப்பன்றி முயல் மான் உள்ளிட்டவைகளை அதிகளவில் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வனத் துறையினர் வனப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று வந்தனர்.

நேற்று சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள கருவாட்டு பாறை பீட் கோட்டைமேடு வழித்தட பகுதியில் ரோந்து சென்றபோது இரண்டு பேர் காட்டு முயல்களை வேட்டையாடும் நோக்கத்தோடு சுருக்கு கம்பிகளை கட்டிக் கொண்டு இருந்தனர். இதை கண்ட வனத்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது காடையாம்பட்டி அருகே உள்ள தும்பிபாடி ஊராட்சி தொட்டி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் அவரது மகன் குப்புசாமி என தெரியவந்தது. இவர்கள் இருவரும் காட்டுயிர்களை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வன உயிரின வழக்கு பதிவு செய்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சுருக்கு கம்பி வலைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement:

Related posts

”7 பேர் விடுதலை: ஆளுநரிடம் முறையான பதில் இல்லை”- மு.க.ஸ்டாலின்!

Jayapriya

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

Nandhakumar

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Niruban Chakkaaravarthi

Leave a Comment