இரண்டரை கோடி கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெற்று, பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் மினி கிளினிக்கை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். . தடுப்பூசிகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு, தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் உரிய நெறிமுறைப்படி, முதலில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்றார். தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும், என்றும் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.
Advertisement: