இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 59 ஆயிரத்து 856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 8 லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 630 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகவும் இதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement: