இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மைய தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரூச் நகரில் உள்ள பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று நள்ளிரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை 18 ஆக இன்று அதிகரித்துள்ளது. இந்த தீவிபத்தில் 2 செவிலியர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த இரங்கலில் அவர் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!

Gayathri Venkatesan

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

Jeba

காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிய கும்பல்!

Jayapriya